Share via:
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கூடியுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தற்போது 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதன்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வழி வகை செய்யும் மசோதாவான இதற்கு ‘‘நாரிசக்தி வந்தன்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் சட்ட மசோதா என்ற பெருமையை நாரிசக்தி வேந்தன் பெற்றுள்ளது பெருமைக்குரியது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ள 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் இன்றே சட்டமாக இயற்றப்பட்டால் வரலாற்று சிறப்பு மிக்க இன்றைய தினம் மாறும் என்று சட்டவல்லுனர்கள் ஆவலுடன் தெரிவித்துள்ளனர்.