News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

அடுத்த 5 நாட்களுக்குள் கனடா தூதரக அதிகாரி இந்தியா¬ விட்டு வெளியேற வேண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜிப் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது  உலக அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து மூத்த அதிகாரியை வெளியேற்றி கனடா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் காலிஸ்தான் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திய இந்தநிலையில், இந்தியாவுக்கான கனட தூதர் கேமரூன் மேக்கேயை  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று அழைத்து பேசியது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனட தூதரக உயர் அதிகாரியான தூதர் கேமரூன் மேக்கேயை இன்னும் 5 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link