Share via:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகளில் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அங்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம், மனம் மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்து குழந்தை பராமரிப்பு பழக்கத்தினை மேம்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உப்பேரிக்குளம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடியில் மோனிகா என்ற சிறுமி பயனாளியாக இருந்துவந்தார். அவர் மதிய உணவு சாப்பிட்ட நிலையில் அவருக்கு வாந்தி மயக்கம், ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறுமியின் உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர். மேலும் அங்கன்வாடியில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளனர். அங்கன்வாடியில் உணவு அருந்திய சிறுமி மோனிகா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையம், மக்கள் மனதில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.