Share via:
அர்ச்சகர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 3 பெண் அர்ச்சகர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் நிதி உதவித் தொகை வழங்கியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, நம் மாண்புமிகு முதலமைச்சரையே சேரும். சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய 3 சகோதரிகள் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு அவர்களுடைய பணிக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதியை வழங்கியுள்ளோம்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண், – பெண் பாகுபாட்டையும் களைந்துள்ளதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த சகோதரிகளின் பணி சிறக்கட்டும் என வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.