Share via:
16வது ஆசியக் கோப்பையை நேற்று (செப்.17) இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தட்டிச் சென்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. அப்போது முதல் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்ததுதான். அதன் பின்னர் முகமது சிராஜ் தொடர்ந்து 6 விக்கெட்டுகளை மிகவும் குறுகிய இடைவெளியில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 50 ரன்களுக்கு இலங்கை அணியின் மொத்த ரன்களை சுருக்கினார்கள்.
வெறும் 51 ரன்கள் எடுத்தால் போதும் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க பேட்ஸ்மேன்கள் மூலமே அந்த 51 ரன்கள் என்ற இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 16வது ஆசியக் கோப்பையை வென்றது. இது இந்திய அணியின் 8வது ஆசியக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1984 முதல் 2023ம் ஆண்டு வரை ஆசியக் கோப்பையை வென்ற அணி குறித்த விவரம் உங்களுக்காக:
1984ம் ஆண்டு கேப்டன் சுனில்கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி
1986ம் ஆண்டு கேப்டன் துலீப் மெண்டில் தலைமையிலான இலங்கை அணி
1988ம் ஆண்டு கேப்டன் திலீப் வெங்சர்க்கார் தலைமையிலான இந்திய அணி
19901&991ம் ஆண்டு கேப்டன் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி
1995ம் ஆண்டு கேப்டன் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி
1997ம் ஆண்டு கேப்டன் அர்ஜூன ரனதுங்க தலைமையிலான இலங்கை அணி
2000ம் ஆண்டு கேப்டன் மொயின்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி
2004ம் ஆண்டு கேப்டன் மார்வன் அதபத்து தலைமையிலான இலங்கை அணி
2008ம் ஆண்டு கேப்டடன் மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணி
2010ம் ஆண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி
2012ம் ஆண்டு கேப்டன் உல்ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி
2014ம் ஆண்டு கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி
2016ம் ஆண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி
2018ம் ஆண்டு கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி
2022ம் ஆண்டு கேப்டன் தசன் ஷனக தலைமையிலான இலங்கை அணி
2023ம் ஆண்டு கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி
அதன்படி இந்திய அணி 8 ஆசியக் கோப்பைகளையும், இலங்கை அணி 6 கோப்பைகளையும், பாகிஸ்தான் அணி 2 கோப்பைகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

