Share via:
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 30ம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் தோல்வியடைந்ததால் வெளியேற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது. ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை அணி 2வது இடத்திலும் உள்ளன. அதன்படி தலா 4 புள்ளிகள் பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணி இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இந்நிலையில் இன்று இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து இலங்கை பலப்பரீட்சை நடத்துகிறது. முதல்கட்டமாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த ஆர்வமும் இந்தியாவின் வெற்றியை நோக்கியே உள்ளது. இடையில் மழை பெய்து ஆட்டத்தை நிறுத்திவிடக் கூடாது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.

