Share via:
துபாயில் நடைபெற்ற சைமா 2023 விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படத்துறை சார்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.ஃ
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சைமா விருதுகள் திரையுலகத்தினரின் பெரிய கனவு என்றே சொல வேண்டும். கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு துபாயில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இதில் தென்னிந்திய திரை உலகை பெருமைப்படுத்தும் வகையில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் அதிகளவில் விருதுகளை வாங்கியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகளை பெற்ற வெற்றியாளர்கள் பட்டியல் இதோ உங்களுக்காக:
* சிறந்த நடிகருக்கான விருது (விக்ரம் திரைப்படம்) உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது.
* சிறந்த நடிகை திரிஷா (பொன்னியின் செல்வன் முதல் பாகம்)
* சிறந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (விக்ரம்)
* சிறந்த காமெடி நடிகர் யோகிபாபு (லவ் டுடே)
* சிறந்த வில்லன் எஸ்.ஜே.சூர்யா (டான்)
* சிறந்த இசையமைப்பாளர் அனிருத் (விக்ரம்)
* சிறந்த பாடகர் கமல்ஹாசன் (விக்ரம்)
* சிறந்த பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் (பொன்னியின் செல்வன் முதல் பாகம்)
* சிறந்த துணை நடிகர் காளிவெங்கட் (கார்கி)
* சிறந்த துணை நடிகை வசந்தி (விக்ரம்)
* சிறந்த அறிமுக நடிகர் பிரதீப் ரங்கநாதன்
* சிறந்த அறிமுக நடிகை அதிதி ஷங்கர் (விருமன்)
* சிறந்த அறிமுக இயக்குனர் மாதவன் (ராக்கெட்ரி)
* சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) கீர்த்திசுரேஷ் (சாணி காயிதம்)
* சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) மாதவன் (ராக்கெட்ரி)
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் முதல் பாகம்)
* சிறந்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் (பொன்னியின் செல்வன் முதல் பாகம்)
* சிறந்த அறிமுக தயாரிப்பாளர் கவுதம் ராமச்சந்திரன் (கார்கி)
* திரைத்துறையில் சிறந்த பங்களிப்பாளர் விருது மணிரத்னம்
இப்படி விருது பட்டியல்களில் 5 விருதுகளை பெற்ற படமாக விக்ரம் பெருமை சேர்த்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு தமிழ்த் திரையுலகின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விக்ரம் திரைப்படம் வசூலிலும் விருதுகளின் எண்ணிக்கையிலும் முறியடித்துள்ளது கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

