Share via:
சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வழக்கு போடப்பட்டிருக்கும் சூழலில்
இன்னமும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முடிந்தால் என் மீது கை வைத்துப்
பாருங்கள் என்று மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்.
அதோடு, தமிழகத்தில் போதைக் கலாச்சாரத்துக்கும் அறநிலையத் துறை
மற்றும் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடிகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களை மட்டும்
குற்றம் சுமத்துவது சரியில்லை. அத்தனை நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும்
முதல்வர் ஸ்டாலினே காரணம் என்று தொடர்ந்து தி.மு.க. மீது சீமான் தாக்குதல் நடத்துகிறார்.
`முடிந்தால் என்னைக் கைதுசெய்யுங்கள்’ என்று மார்தட்டும் சீமான்
மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்
கேட்டார்.
அதற்கு ஆர்.எஸ்.பாரதி, ‘’நான் முதலமைச்சரிடம் இது குறித்துப் பேசினேன்.
சீமான் லெவலுக்கு நாம் இறங்கவேண்டியதில்லை…விட்டுவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
சொல்லப்போனால் தி.மு.க-வினரை வேண்டுமென்றே வம்பிழுக்கிறார் சீமான். நாங்கள் மட்டும்
ஆட்சியில் இல்லையெனில் அவரை எதிர்கொள்ள ஒரு நிமிடம் ஆகாது. ஆட்சியில் இருப்பதால் அவப்பெயர்
வந்துவிடக் கூடாது எனத் தொண்டர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.
கலைஞரைச் சிறையில் வைத்தபோது 21 பேர் தீக்குளிக்கும் அளவுக்கு
உணர்வாளர்கள் மிகுந்த கட்சி இது. அதில் ஒருவர் துணிந்துவிட்டாலும் கதையே வேறு. இருந்தாலும்
நாங்கள் அவரை இக்னோர் செய்கிறோம்..’’ என்று கூறியிருக்கிறார்.
சீமானை கைது செய்தால் தமிழகத்தில் வன்முறை ஏற்படும், அதை கட்டுப்படுத்த
முடியாது என்று நினைக்கிறாரா ஆர்.எஸ்.பாரதி.