News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் தற்போது நடிகர் விஜய்யின் ‘லியோ’ உருவத்தில் விநாயகர் சிலைகள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

நாளை மறுநாள் (18ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வெவ்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பெரியளவு முதல் சாதாரண அளவு வரையிலான பிள்ளையார் சிலைகளை ஆர்வமுடன் பக்தர்கள் கவனிப்பது வழக்கம். அந்தவகையில் புஷ்பா, பாகுபலி என சினிமா கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.

 

அதே பாணியில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘லியோ’ திரைப்படத்தை மையப்படுத்தி விநாயகர் சிலை உருவாகியுள்ளது. இந்த லியோ விநாயகர் சிலை 8 அடி உயரம் கொண்டுள்ளது. 25 நாட்களில் 5 கலைஞர்களைக் கொண்டு விஜய் ரசிகர்கள் இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ எப்படிப்பட்ட கதைக்களத்தில் அமைந்துள்ளது என்று ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது லியோ விநாயகரை கொண்டாடி வருகிறார்கள். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link