Share via:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசாக வழங்கப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது அரசியல் களத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற ராகுல்காந்தி பேசும்போது, ‘‘இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி சிந்திக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை என்று பேசினார்.
இதனால் ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிக்க திட்டமிடுகிறார் என்று பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இந்நிலையில் ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்ட்வாட் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷிண்டேவின் இந்த பேச்சு அரசியல் களத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.