News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கோவை ஈஷா மையத்துக்கு ஒரு பிரச்னை என்றால் உச்ச நீதிமன்றமே ஓடோடி வந்து அவசர வழக்காக விசாரிக்கும். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை வழக்குகள் இருந்தும் உத்தமர் போன்று ஈஷா காட்சியளிப்பது தான் மேலிடத்து ஆசிர்வாதம்.

ஈஷா மைத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, அதில் 5 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் 7 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 2 வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஈஷா மையத்தின் மருத்துவர் சரவண மூர்த்தி மீது பல மாணவிகள் அளித்த புகார் அடிப்படையில் தொடரப்பட்ட பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது.

மருத்துவர் சரவணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார், டெல்லியை சேர்ந்த கமாலா கிஷோர் என்பவர் கொடுத்த பாலியல் புகாரில் ஈஷா மையத்தை சேர்ந்த நவீன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் புகார் கொடுத்த பெண் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.

நில அபகரிப்பு மற்றும் தாக்குதல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஈஷா பள்ளியில் பயிலும் 45 மாணவர்களிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் POCSO சட்டம் , குழந்தைகள் உரிமை, குழந்தைகள் பாதுகாப்பு எண் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிக்கை அளித்துள்ளனர்.

ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்களில் சிலருக்கு மனரீதியாலான அழுத்தம் உள்ளது அதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர். மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு ஈஷா மையத்தில் முறையாக செயல்படவில்லை இந்த விபரங்கள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை எல்லாம் முறையாக விசாரணை நடத்த தமிழக போலீஸாரை உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அனைவருக்குமான நீதியாக இருக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link