News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தினம் ஒரு ஆடியோ வெளியாகி சீமான் கட்சியினரை பதற வைத்துக்கொண்டு இருக்கிறது. சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அவருடைய செல்போன் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அதிலிருந்து தகவல்கள் லீக் ஆவதாகவும் இடும்பாவனம் கார்த்தி ஒரு பதிவு போட்டார்.

இந்த நிலையில் இடும்பாவனம் கார்த்தி ஒரு பெண்ணை ஏமாற்றி கைவிட்டதாக  திருச்சி சூர்யா பேசினார். இந்த பெண் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்தது சீமானும் துரைமுருகனும் இடும்பாவனம் என்று சில ஆதாரங்களையும் வெளியிட்டார். இதையடுத்து இடும்பாவனம் கார்த்தி சைலண்ட் மோடுக்குப் போய்விட்டார் என்றாலும், அவரால் குற்றம் சாட்டப்பட்ட தமிழச்சி, ‘தனிப்பட்ட புகைப்படங்களையும், உரையாடல்களையும் பொதுவெளியில் வெளியிட்ட திருச்சி சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையில் புகார் அளிக்க இருக்கிறேன்’ என்று ஒரு பதிவுடன் அவர் காணாமல் போய்விட்டார்.

இதையடுத்து போலீஸ் போஸ்டிங் குறித்து சீமான் பேசிய ஒரு வீடியோ ஆளும் கட்சியினரையும் கலங்கடித்தது. சீமானுக்கு இந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போதே இத்தனை செல்வாக்கு இருக்கிறதா என்று அனைவரும் அசந்து போனார்கள்.

இப்போது வெளியாகியிருக்கும் ஒரு ஆடியோவில் நித்தியானந்தா எத்தனை பணம் வேணும்னாலும் சம்பாதிக்கட்டும், பக்கத்தில் வெள்ளை வெள்ளையா பொண்ணுங்களை வைச்சிருக்கான் என்று புலம்பும் வீடியோ வெளியானது.

அடுத்து, இப்போது கட்சிக்குள் இரண்டு பிசிறுகள். காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோரை வெளியேற்றணும் என்பது போன்ற ஆடியோவும் வெளியாகியிருக்கின்றன. வழக்கமாக இது போன்ற ஆடியோக்கள் வந்தால் விரட்டி விரட்டி அடிக்கும் நாம் தமிழர் நிர்வாகிகளும், தம்பிகளும் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் ஆச்சர்யம்.

தி.மு.க.வினர் இப்போது இந்த ஆடியோ பதிவுகளை வைரலாக்கி வருகிறார்கள். அதோடு, ‘’சீமான் மேடையில் பெண்களை புகழ்ந்து பேசுவதும், மேடையில் இருந்து இறங்கியதும் கேவலமாகப் பேசுவதும் சகஜம். பெண் சீமான் என்று புகழ் பெற்ற காளியம்மாளுக்கே இந்த நிலை தான் என்றால் கட்சிக்குள் மற்ற மகளிர் பாசறையில் பயணிக்கும் பெண்களுக்கு என்ன மரியாதை இருக்கும் ?

50-50 பெண்கள் என்று பேசினால் மட்டும் போதாது கட்சியின் அதிகாரமிக்க பொறுப்பில் அவர்களைக் கொண்டு வர வேண்டும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு கயல்விழி சீமான் வருவதை தடுக்கும் ஒரே ஆள் காளியம்மாள் தான் அதனால் தான் காளியம்மாளை கட்டம் கட்டுகிறார்கள்’’ என்கிறார்கள்.

மேடையில் மைக் முன் நரம்பு புடைக்க பேசும் சீமானை பார்த்து ரசித்தவர்கள் கூட, அலைபேசி உரையாடலில் ஹஸ்கி வாய்ஸில் பேசும் சீமான் குரலை கேட்டு பதறுகிறார்கள். சீமான் சினிமா சூட்டிங்கிற்கு சென்றுள்ள நிலையில் தொடர்ந்து திட்டமிட்டு இப்படி பரப்பப்படுவதாக அவரது கட்சியினர் ஆதங்கப்பட்டாலும், ‘அண்ணன் இப்படி பேசுறது சகஜம் தான்’ என்பதாலே அமைதியாக இருக்கிறார்கள்.

அதேநேரம், தொடர்ந்து தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்துவரும் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்களை சிறையில் அடைப்பது தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கும் என்பதாலே இப்படி ஆடியோ தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தம்பிகளுக்கு யாராச்சும் ஆறுதல் சொல்லுங்கப்பா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link