News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

கரிசல் இலக்கியத்தின் தந்தையான கி.ராஜநாராயணனுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரின் சாதனைகளையும், சேவைகளையும் அனைவரும் அறியச் செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

 

கோவில்பட்டி மக்களால் கி.ரா.என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர்தான் கி.ராஜநாரயணன். 1922ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கோவில்பட்டி அருகில் உள்ள இடைசேவல் கிராமத்தில், ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியின் 5வது பிள்ளையாக பிறந்தார். இவருடைய முழு பெயர் ராயங்குல ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.

 

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயியாக இருந்தாலும், கதை சொல்வதில் வல்லவராக விளங்கினார். அவர் ஒரு முறை சொல்லும் போது, ‘‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன், பள்ளிக்கூடத்தை பார்க்காமல் மழையை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டேன்’’ என்று தெரிவித்தார்.

 

பன்முகத் தன்மை கொண்டிருந்த கி.ராஜநாராயணன் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். இலக்கியத்தில் நாட்டம் கொண்ட ஈரா. நல்ல இசை ஞானத்தையும் பெற்றிருந்தார்.

 

மேலும் கவியரசு நா.காமராசன் நடத்திய இலக்கிய ‘சோதனை’ என்ற இலக்கிய பத்திரிகையின் ஆலோசகராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு முதல் முதலாக அகராதி உருவாக்கிய பெருமை¬ கி.ரா.வையே சேரும். இவர் தன் வாழ்நாளில் சாகித்ய அகாதமி, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய சாதனை விருது, மனோன்மணியம் சுந்தரானர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி தமிழ் மக்களை உலக அரங்கில் பெருமைப்படுத்தினார்.

 

கி.ரா. 2021ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி தனது 98வது வயதில் புதுச்சேரியில் காலமானார். இவரின் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான இடைசெவலில் தகனம் செய்யப்பட்டது.

 

சிறுகதைகள், குறுநாவல், நாவல், கட்டுரை, திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவது என தனது வாழ்நாளில் கி.ரா. தமிழ் மொழிக்கும், தமிழின் மாண்பமைக்கும் அரும்பாடுபட்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அத்தகைய பெருமையை கொண்ட கி.ரா.வின் 100வது பிறந்தநாளான இன்று அவரின் புகழை உலகளவில் பரவச்செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link