News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

கேரளாவை உலுக்கி வரும் நிபா வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக தப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.


நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் தொற்றாகும். வௌவால்கள் கடித்த பழங்களை உட்கொள்வதால் நிபா வைரஸ் தொற்று உருவாகிறது. மேலும் அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் உள்ளிட்டவற்றாலும் நிபா வைரஸ்  தொற்று ஏற்படுகிறது.


வௌவால்கள் மூலம் வீட்டில் வளர்க்கப்படும் குதிரை, நாய், பூனை மற்றும் எலி உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பரவுவதால் அவற்றின் மூலம் மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது.

அப்படி நிபா வைஸ் காய்ச்சலால்பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் உமிழ்நீர், ரத்தம் சிறுநீர் உள்ளிட்டவை மூலம் மற்றொரு மனிதனுக்கு இக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது.


அறிகுறிகள்:

நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை இந்த வகை அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவை காய்ச்சல், தலைவலி, உடல்வலி, அசதி, இருமல், வாந்தி உள்ளிட்டவை இருந்தால் கவவனமாக இருக்க வேண்டும். மேலும் மூச்சுத்திணறலுடன் சேர்த்து பார்வை கோளாறும் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது.


தடுப்பூசி:

நிபா வைரஸ் தொற்று பரவலுக்கு இன்னும் தடுப்பூசி எதுவம் கண்டுபிடிக்கப்படாததால், வரும் முன் காப்பதுதான் சிறந்தது என்பதை மக்கள் நன்கு புரிந்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


எப்படி தடுப்பது?

நோய் பாதிப்புள்ள பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதுடன், வீட்டு வளர்ப்பு பிராணிகளிடம் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அதனை விலங்கு நல மருத்துவரிடம் அழைத்து செல்லுதல் என நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.



சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் தானாக மருந்து உட்கொள்ளாமல், மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் எலி, பூனை உள்ளிட்டவை இறந்து கிடந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து அவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.



கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தொற்றின் பார்வை தற்போது புதுச்சேரியிலும் பாய்ந்துள்ளதால் புதுச்சேரி சுகாதாரத்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நெறிமுறைகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link