News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

நடிகர் வடிவேலு காமெடி காட்சி பாணியில் சும்மா படுத்திருந்தா போதும் 88 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற நூதன போட்டி மாண்டினீக்ரோ என்ற நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அப்படி என்னதான் சுவாரசியம் இருக்கிறது என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.

 

நடிகர் வடிவேலு ‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தில், தன்னை மட்டமாக பேசிய ஒருவரை ஒரு மணி நேரம் சும்மா இருந்துக் காட்டு. அப்படி மட்டும் நீ சும்மா இருந்துக்காட்டிவிட்டால் 5 சவுக்கடி என்ன? 10 சவுக்கடி கூட வாங்கிக் கொள்கிறேன் என்று சவால் விடுவார்.

 

அந்த நபரும் தன்னை தேடி வரும் அலுவல்களை எல்லாம் வடிவேலுவுக்கு பயந்து புறக்கணித்துவிட்டு பின்னர் முடியாமல் போகவே சவுக்கடிகளை வாங்கிக் கொள்வார். சும்மா இக்கிறதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது என்று கடைசியாக வடிவேலு சொல்வது தான் அங்கு ஹைலைட்.

 

 

இந்த காமெடி பாணியில் சும்மா படுத்திருந்தால் போதும். அதற்கு பரிசு என்ற போட்டி தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மாண்டினீக்ரோ என்ற நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நாட்டில் உள்ள பிரெஸ்னா என்ற கிராமத்தில் வருடந்தோறும் ’சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதற்காக புக் செய்யப்படும் ரிசார்ட்டில் 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள். ஏற்கனவே 26 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது 7 பேர் மட்டுமே விடா முயற்சியுடன் சும்மா படுத்துக் கொண்டே போட்டியில் நீடித்து வருகின்றனர்.

 

24 மணிநேரமும் உட்காரமல், நடக்காமல், நிற்காமல் வெறுமனே மெத்தையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் தூங்கக்கூடாது. அப்படி படுத்துக் கொண்டே உணவு சாப்பிடவும், நீர் மற்றும்  குளிர்பானம் பருக அனுமதிக்கப்படுகிறார்கள்.

தவறுதலாக மெத்தையில் இருந்து எழுந்துவிட்டால் அவ்வளவுதான் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். 8 மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிடங்களில் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் போட்டியாளர்களின் உடல்நிலையை அங்குள்ள மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

இறுதி வரை போட்டியில் வெற்றிகரமாக படுத்துக் கொண்டே வெற்றி பெறும் போட்டியாளருக்கு சோம்பேறி குடிமகன் என்ற விருதுடன் சேர்த்து 88 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட உள்ளது.

 

அடடா நல்ல போட்டியா இருக்கே என்று நீங்கள் நினைத்தால் அதுதான் கிடையாது. மாங்குமாங்கு என்று வேலை கூட செய்துவிடலாம். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் படுத்தே கிடந்தால் வரும் உடல்வலியை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. கடைசியில் வடிவேலு சொல்வது போலத்தான் சும்மா இருக்கிறது ஒன்றும் அவ்வளவு சுலபம் கிடையாது என்பது உண்மையாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link