News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

இளம் கிரிக்கெட் வீரரை, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது பைக்கில் அழைத்து சென்று லிப்ட் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டுள்ளார்.

 

இருப்பினும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதை எம்.எஸ்.தோனி வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, தன்னுடன் பயிற்சி மேற்கொண்ட இளம் கிரிக்கெட் வீரருக்கு  பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார்.

 

பைக் பிரியரான எம்.எஸ்.தோனி நூற்றுக்கணக்கில் பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். அதன்படி தன்னுடைய ஆர்.எக்ஸ்.350 பைக்கில் இளம் வீரரை அழைத்துச் சென்றுள்ளார். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட இளம் வீரர் தோனியுடனான தனது பயணத்தை வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹெல்மெட் அணிந்தபடி தோனி பைக் ஓட்டும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள். எளிமைக்கு பெயர் தோனி என்று சும்மாவா சொன்னார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link