Share via:
சென்னையில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று முதல் (செப்.15ம்தேதி) தொடர்ந்து 3 நாட்களுக்கு பாதுகாப்புப் படை ஒத்திகை பயிற்சி நடைபெற இருக்கிறது. நிணீஸீபீவீஸ்-மிக்ஷி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒத்திகையின் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றம் அவற்றை முறியடிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியை சிறப்பாக நடத்தி முடிக்கவும், இதன் எதிரொலியாகவும் சென்னையில் இன்று முதல் வரும் 17ம் தேதி (ஞாயிறு) வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குறிப்பிட்ட 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்கள் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்புப் படையின் இந்த பயிற்சி ஒத்திகைக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரி மாணவர்கள் தங்கள் சோதனைகளை மேற்கொள்வது சற்று தள்ளிப் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.