Share via:
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்து உத்தரவிட்டார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறுவிசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 7ம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்முடி, லஞ்ச ஒழிப்புத்துறை வாயிலாக வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை என இருதரப்பும் வைத்த கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்து, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை அக்டோபர் மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.