News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ‘உங்களை எப்போது முதலமைச்சரா பார்ப்பேன்னு என் மாமியார் கேட்கிறார்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் கலகலப்பான விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது.

கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளான பிறகும் கவுன்சிலர் ஆகவே வழியில்லாத மாப்பிள்ளையைப் பார்த்து மாமியார் கிண்டல் செய்ததை, நிஜமென்று நம்பி ஆதங்கப்படுகிறாரே என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம், அந்த குறும்புக்கார மாமியாரு யாருங்க என்று அவரது அத்தனை மாமியார்களையும் தோண்டியெடுத்து வம்பு இழுக்கிறார்கள்.

அதேநேரம், சரத்குமார் வேண்டுமென்றேதான் இப்படி பேசினாராம். அடுத்து வரயிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லையில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

எடப்பாடியின் அ.தி.மு.க.வில் சரத்குமாருக்கு கடந்த தேர்தலில் உரிய மரியாதை இல்லை என்பதால், தினகரன் கூட்டணிக்குப் போனார். இந்த தேர்தலிலும் அவரை கவனிப்பதற்கு ஆட்கள் இல்லை. அதனால் இப்போதே அதற்கான ஏற்பாட்டை தொடங்கியிருக்கிறார்.

மாப்புள்ளைக்குத்தான் எம்புட்டுத்தான் திறமை..?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link