Share via:
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதன் விலை குறைவுக்காக காத்திருப்பது வழக்கம்தான். ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதேநிலைதான் தற்போது டிசம்பர் மாதத்திலும் இருந்து வருகிறது.
அதன்படி சென்னையில் இன்று (டிச.2) ஆபரண தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத இந்த விலை உயர்வு பொது மக்கள் மத்தியிலும், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து ரூ.47 ஆயிரத்து 320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,915 ஆக விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை வரும் ஒரு வாரத்தில் ரூ.6 ஆயிரத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை மேலும் உயரலாம் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் வெள்ளி விலையை பொறுத்த வரையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.83.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.83 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.