Share via:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிர்வாக தயாரிப்பு பொருட்கள் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால், தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆவின இயக்குனர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் தற்போது பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர் உள்ளட்ட பொருட்களுக்கான மக்களின் தேவையை கருத்தில் கொண்டு எவ்வித தடையுமின்றி விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் பால் தயாரிப்பில் பொது மக்கள் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யின் விலை வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பை முன்னிட்டு பொது மக்கள் ஆவின் நெய்யை வாங்கி பயன்படுத்துமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.