News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிச.1) காலை 11 மணியளவில் நடைபெற்றது. 

 

இது குறித்து செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், மேல்பா சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக் பேரணியாக சென்ற போது, அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து தமிழக அரசு அராஜகமாக நடந்து கொண்டதாக ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 4ம் தேதி 22 போராட்டக்காரர்களை கைது செய்து அவர்களில் 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் 6 பேர் மட்டும் எந்த திட்டத்தையும் எதிர்க்கமாட்டோம் என்று எழுதிக் கொடுத்ததன் பேரில், அவர்கள் மீதான குண்டர்சட்டத்தை முதலமைச்சர் நீக்கி உத்தரவிட்டார். அவர்களில் அருள்ஆறுமுகம் என்பவர் மட்டும் கடந்த 15 நாட்களாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும் நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இக்கூட்டத்தில் பச்சைத்தமிழகம் கட்சியின் தலைமை பணியாளர் சு.ப.உதயகுமாரன், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஆலோசகர் கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link