News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இயக்குனர் அமீருக்கு ஆதரவாக, ‘‘ஞானவேல் ராஜா ஒரு களவாணிப்பய’’ என்று இயக்குனர் கரு.பழனியப்பன் பகிரங்கமாக குற்றம்சாட்டிய சம்பவம் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குனர் மீது ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு, பின்னர் அமீர் எனக்கு அண்ணன் போன்றவர். அவரது குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வருபவன். அவரை நான் அண்ணன் என்றுதான் அழைப்பேன். என் மீது குற்றம்சாட்டப்பட்டதால்தான் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தினேன். அது அமீர் அண்ணனின் மனதை புண்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

இந்த அறிக்கையை விமர்சிக்கும் வகையில் இயக்குனர்கள் சமுத்திரகனி மற்றும் சசிகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அமீர் குறித்து அவதூறாக பேசி வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவை டெலிட் செய்ய வேண்டும். கடன் பாக்கியை செலுத்த வேண்டும் என்றும் சமுத்திர கனி தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான கரு.பழனியப்பன், அமீர், ஞானவேல்ராஜா விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

அவர் கூறும்போது, ‘‘பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினையில் என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் அந்த படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றியதோடு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்து வந்தேன், பருத்திவீரன் திரைப்படத்தில் நல்ல விஷயங்கள் பல இருந்தபோதிலும் அவர் கண்களுக்கு பன்றிகள் மட்டும்தான் தெரிந்திருக்கிறது. காமாலை நோய் வந்தவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல்  ஞானவேல் ராஜா ஒரு களவாணிபய. அதனால்தான் பார்ப்பவர்களை எல்லாம் திருடர்களாக தெரிந்திருக்கிறது’’ என்று எந்த ஒளிவுமறைவுமின்றி பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசினார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய கரு.பழனியப்பன், ‘‘கார்த்தி என்ன பெரிய சிவாஜி கணேசனா? ஞானவேல் பேசியதற்கு அடுத்த நாளே கார்த்தியோ, சூர்யாவோ, அல்லது நடிகர் சிவகுமாரோ அவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பொத வெளியில் சொல்லி இருக்கலாமே? அப்படி ஒரு சம்பவம் நடக்காததால்தான் அவர்கள் பின்னணியில் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நடிகர் கார்த்திக் தற்போது வரை 25 திரைப்படங்கள் நடித்திருக்கிறார் என்றால் அதற்கான விதை அமீர் போட்டதுதான்’’ என்று தெரிவித்தார்.

 

இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சமுத்திரகனி, பொன்வண்ணன், சுதா கொங்கரா, சசிகுமார் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ள நிலையில், அந்த பட்டியலில் தற்போது கரு.பழனியப்பனும் சேர்ந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link