News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தொடர் மழை காரணமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக அகற்றி வருகின்றனர்.

 

தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

 

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி படிப்படியாக விநாடிக்கு 6 ஆயிரம் கன அடிநீர் அளவுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின்னர் 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்ட நீர் திறப்பு தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இது 402 கன அடியாக உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது பொது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link