Share via:
0
Shares
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக மெரீனா கடற்கரை மணற்பரப்பு முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மணற்பரப்பே கண்களுக்கு தெரியவில்லை. மேலும் அங்கு போடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் தண்ணீரில் பாதியளவுக்கு மூழ்கியுள்ளதால் கடைகள் திறக்கப்படவில்லை.
மழையின் காரணமாக மெரீனா கடற்கரைக்கு பொதுமக்கள் வராத நிலையில், கடைகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், கடலை தாண்டி ஒரு தீவுபோலவும், தீவுக்கு நடுவில் கடைகள் இருப்பது போலவும் தோன்றுகிறது.
Tagged latest