Share via:
மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று (நவ.29), ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்கரய்யா, ஆன்மிக தலைவர் பங்காரு அடிகளார் ஆகியோரின் மறைவுக்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது தண்டையார்பேட்டைமண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பரமேஸ்வரன் நகர் பகுதியில் கழிவுநீர், மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை கொடுக்க முடியவில்லை என்றும்ல தற்காலிக வரி விதிப்பு படி அவர்கள் வீடுகளுக்கு வரி விதிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்து துறை ரீதியிலான பதில் அளித்தார்.
அதைத்தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கவும், 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக வழங்கவும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கல்வி அலுவலர் தலைமையிலான குழுவை அமைத்து ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்குதுல், காலதாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்தல், தரம் குறைந்த உணவு வழங்கினால் 3 முறை அபராதமும், அது மீண்டும் தொடர்ந்தால் ஒப்பந்தம் ஒத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.