Share via:
1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து.
சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அதேவேளையில் கூட்டு சதி குற்றச்சாட்டில் இருந்து அவர்களை விடுதலை செய்தது.
கூட்டு சதி குற்றச்சாட்டில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து. இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்தும், வழக்கில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோரை விடுதலை செய்தும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சேலத்தில் அதிமுக கோட்டையாக வைத்திருந்தார் செல்வகணபதி. ஆனால் அப்போது திமுக கோட்டையாக மாற்றிய வீரபாண்டியாரை சமாளிக்க தற்போதைய முதல்வரின் மூலம் திமுகவுக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு எம்பி யும் பெற்றுக் கொடுத்தார். அந்த நேரத்தில் வீரபாண்டியார் இறந்து போக அந்த நேரத்தில் செல்வகணபதியை திமுகவில் வளரும் நேரத்தில் ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது விடுதலை ஆனதால் மீண்டும் எம்.பி. ஆவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.