Share via:
அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நிகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடனல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அந்த நிகழ்வு வருகிற 29ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிதாக உருவாக உள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அந்தமான் தீவுகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இன்று (நவ.27) நிக்கோபர் தீவுகள் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.