News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதை அசோகவனத்தில் அமர்ந்திருந்த கல் தற்போது ராமர் கோவில் வைத்து வழிபடுவதற்காக அரசு மரியாதையுடன் இந்தியா வந்து சேர்ந்தது.


இலங்கை மன்னன் ராணவனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதை அங்கிருந்த அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்போது சீதை அமர்ந்திருந்ததாக சொல்லப்படும் கல்லை இந்தியாவிற்கு கொண்டு வந்து வழிபட ராமஜென்ம பூமி அறக்கட்டளை முடிவு செய்தது.


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா வருகிற (2024) ஜனவரி மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


இதற்கிடையில் சீதை அமர்ந்திருந்த கல் குறித்து இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதனை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது. அதைத்தொடர்ந்து உரிய மரியாதையுடன் இலங்கை அரசாங்கம் அக்கல்லை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது.


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் முழு மரியாதையுடன் அந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்ட போது விமான நிலையதத்ல், இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய இசைக் குழுவினர் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அந்த கல் ஒப்படைக்கப்பட்டது.


சீதை அமர்ந்திருந்த கல் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் உரிய இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link