News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆந்திராவில் வருகிற டிசம்பர் 9ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இருப்பினும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன் வரிசையில் தற்போது ஆந்திர மாநிலமும்  இணைய உள்ளது.


அதன்படி ஆந்திராவில் வருகிற டிசம்பர் மாதம்  9ம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி சீனிவாச வேணுகோபால் கிருஷ்ணா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கனவே 2 நாட்கள் சோதனை முறையில் நடித்தி முடிக்கப்பட்ட நிலையில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு வருகிற டிசம்பர் 9ம் தேதி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்தந்த மாநிலங்கள் தன்னிச்சையாக நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link