Share via:
போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் தனக்கு பிறந்த 2 குழந்தைகளை விற்ற பெற்றோர் உள்பட 4 பேரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது சகோதரன் சபீர் மற்றும் அவரது மனைவி சானியா ஆகிய இருவருக்கும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து ஒரு மாதமேயான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ள எனது சகோதரன் மற்றும் அவரது மனைவி போதைப் பொருள் வாங்க பணம் இல்லை என்பதால் அவர்கள் பெற்ற 2 குழந்தைகளையும் 74 ஆயிரம் ரூபாய்க்கு வேறொரு நபரிம் விற்றவிட்டதாக அந்த புகார் மனுவில் பகீர் தகவல்களை தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து உஷார்படுத்தப்பட்ட அனைத்து காவல் நிலைய போலீசாரும் 2 குழந்தைகளையும் தீவிரமாக தேடி வந்தனர். அந்த நேரத்தில் குழந்தைகளை விற்பனை செய்யும் முகவரான உஷா ரத்தோட் என்பவரையும், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் மக்ரானி ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் விற்பனை செய்யப்பட்ட பிறந்து ஒரு மாதமேயான பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட நிலையில், 2 வயது ஆண் குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.