News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆவின் நிர்வாகத்தை பெருக்க மாற்று ஏற்பாடுகளை கொண்டு வரும்படியும், பச்சை நிற ஆவின் விற்பனையை உறுதி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஆவின் நிறுவனத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையை அந்நிறுவனம் திடீரென்று முடிவு செய்துள்ளது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பொது மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை ஆவின் நிர்வாகம் திடீரென்று முடிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்திவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

நீண்டகாலமாக புழக்கத்தில் இருக்கும் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகளை திடீரென்று நிறுத்துவதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள டி.டி.வி. தினகரன் நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை அதிகரிக்க மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய 4 விதமான பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் தேவைக்கேற்ப ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link