News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்தான் தற்போது முழு இந்தியாவின் முழு பேச்சாக உள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய கட்சிகள் அந்தந்த மாநில கட்சி நிர்வாகிகளிடம் பிரசார யுக்திகளையும், தேர்தல் பணிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வந்திருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக சீட் கேட்போம்’’ என்று தெரிவித்தார்.

 

மேலும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது கிடையாது. கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாலைக்கண் நோய் இருப்பதால்தான் அவர் தமிழகத்தில் தீண்டாமை என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே கே.எஸ்.அழகிரி கூடுதல் சீட் கேட்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் விவாதம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link