Share via:
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து மற்றொரு பிரபல நடிகை வெளியிட்ட தகவல் தற்போது திரையுலகத்தினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
நடிகை விசித்ரா பிக்பாஸ்7 நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் பேசும்போது, ‘‘கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர் தன்னை இரவு நேரத்தில் ஓட்டல் ரூமுக்கு அழைத்தார். நான் வராததால் கதவை தட்டி தகராறு செய்தார்’’ என்று தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்து அழுதார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நடிகர் பாலகிருஷ்ணாதான் என்று சமூகவலைதளத்தில் செய்திகள் தீயாக பரவியது. நிரூபிக்கப்படாத தகவல் என்ற போதிலும் ரசிகர்கள் விசித்ரா சொன்ன சமயத்தில் இந்த திரைப்படம்தான் வெளியானது என்று டேக் செய்து செய்திகளை பரப்பி வந்தனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தா, தனக்கு நடந்த சம்பவத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். ஷூட்டிங் சென்ற முதல் நாளில் அந்த டாப் ஹீரோ என் காலை தட்டிவிட்டுச் சென்றார். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அனைத்து ஜூனியர் ஆர்டிஸ்டுகள் முன்பும் அவருக்கு வார்னிங் கொடுத்தேன்’’ என்று தெரிவித்தார்.
தெலுங்கு திரையுலகத்தில் ஹீரோக்களை கடவுள் போல் பார்ப்பதாகவும், அங்கு ஆணாதிக்கம் நிறைந்ததாகவும் குற்றம்சாட்டி பேசினார். தமிழில் ராதிகா ஆப்தா தான், நடிகர் ரஜினிகாந்துடன் கபாலி திரைப்படத்தில் இணைந்து நடித்ததை நினைவு கூர்ந்து பேசினார். அவர் கூறும்போது, நான் ரஜினிகாந்துடன் நடித்த போது அப்படி நடந்ததில்லை. அவரைப் போன்ற சிறந்த மனிதர் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு அன்பானவராக இருந்தார்’’ என்று கூறியுள்ளார்.
நிரூபிக்கப்படவில்லை என்றாலும் விசித்ரா விவகாரத்தால் பாலகிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தற்போது ராதிகா ஆப்தே அளித்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

