Share via:
டாப் ஹீரோ ஒருவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை நள்ளிரவில் தட்டி தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதது தற்போது பேச்சுபொருளாக மாறியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா ‘தங்கள் வாழ்வை அசைத்த பூகம்பம்’ என்ற டாஸ்க்கில் மனம் திறந்து பேசினார். அவர்பேசும் போது, ‘‘தெலுங்கு படத்திற்கான ஷூட்டிங் கேரளாவில் நடந்த போது அந்த படத்தின் ஹீரோ நான் தங்கியிருந்த அறைக்கு வந்து, இந்த படத்தில் நடிக்கிறீர்களா? இரவில் என் ரூமுக்கு வா’ என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான விசித்ரா, அந்த ஹீரோவின் ரூமுக்கு செல்லாததால், அன்று நள்ளிரவு நேரத்தில் அவரது அறைக்கதவை தட்டி தொந்தரவு செய்திருக்கிறார். அதன் பின்னர் விசித்ராவின் வேண்டுகோளின்படி அந்த படத்தின் ஷூட்டிங் முடியும் வரை அந்த ஓட்டலில் மாற்று அறை எடுத்து தங்கி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த ஓட்டல் நிர்வாகம்.
அதற்கடுத்த சம்பவமாக காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது ஒரு நபர் தன்னை மோசமான இடத்தில் தடவிவிட்டு ஒளிந்து கொண்ட நிலையில் 3 முறை ரீ டேக் வாங்கி அந்த நபரை விசித்ரா கையும் களவுமாக பிடித்து இயக்குனரிடம் முறையிட்டிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் அந்த நபரை கண்டிக்காமல் விசித்ரா கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.
இது குறித்து நடிகர் சங்கத்திடம் முறையிட்ட போது, நடிகர் சங்க தலைவர் இதையெல்லாம் மறந்துவிட்டு நடிக்க சொன்னதால் போலீசில் புகார் புகார் செய்துள்ளார். யாரும் தனக்கு ஆதரவு தராததால் சினிமாவை விட்டு 20 வருடங்களாக விலகியுள்ளதாக கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
‘இப்படிப்பட்ட மரியாதை தரும் இடத்தில்தான் நீ வேலை செய்கிறாயா?’’ என்று என்னை கேள்வி கேட்ட ஓட்டல் மேனேஜர் தான் என்னை திருமணம் செய்து கொண்டு எனக்கு மரியாதையான வாழ்க்கையைக் கொடுத்துள்ளார் என்று நடிகை விசித்ரா கண்ணீர் மல்க பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசித்ரா குறிப்பிட்டு சொன்ன அந்த நபர்கள் யார்? என்பது குறித்த விவாதம் தற்போது திரையுலகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.