Share via:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதமாகியுள்ள நிலையில் மழையின் அளவு இயல்பை விட குறைவாகவே பதிவானது. இதனால் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில் கடலோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
தமிழகத்தில் அனைத்து இடங்களில் லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கும், புதுவை, காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.