News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.


தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க பி.ஆர்.எஸ். கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்டு உழைக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link