News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சூட்கேசில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் நசுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பை குர்லா பகுதியை அடுத்த சாந்தி நகர் பகுதியில் நேற்று (நவ.19) மாலை நேரத்தில் சூட்கேஸ் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமாக கிடந்த அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண் சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 

 

உடனடியாக தடயங்களை சேகரித்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு சவில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையின்படி சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 25ல் இருந்து 35வயதிற்குள் இருக்கும் என்றும், அந்த பெண் நீல நிற டீசர்ட் மற்றும் ஊதா நிற டிராக் பேண்டும் அணிந்திருந்ததாக தெரிவிக்கின்றனர். 

 

 

மேலும் இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிய வரும் என்று கூறியுள்ளனர். மேலும் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும், அப்படி இருக்கும்பட்சத்தில் சூட்கேசை அங்கே விட்டுச் சென்றது யார் என்ற தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

 

பொது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் சூட்கேசில் ஒரு இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link