Share via:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது இல்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தந்த மாநில கட்சி தலைவர்களுடனும், கட்சி பிரதிநிதிகளுடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று (நவ.20) காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பிலும் கே.எஸ்.அழகிரி உரை நிகழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, ‘‘தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒரு கூட்டம் நடைபெறும் என்றால், அக்கூட்டத்தில் மூத்த மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வாடிக்கை. ஆனால் தற்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக நடைபெறுகிறது என்றும் கூட்டத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களது பெயர் தற்போது முடிந்து போன தலைவர்கள் என்று அழைக்கிறார்கள் என்று கே.எஸ்.அழகிரியை தாக்கும் வகையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.