News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.


வருகிற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி  பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான பணியை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளது.


அதன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழல் குறித்து விவாதம் நடத்தினர்.


மேலும் தங்கள் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப்பணிகள் குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் விவாதித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவனின் 2வது தளத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link