News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

18வது ஜி20 மாநாடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த பெருமை தற்போது இந்தியாவுக்கு சொந்தமாகியுள்ளது. யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு ஜி20 மாநாட்டிற்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதால் ஜி20 மாநாடு இனிதே நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்து பலரின் பாராட்டையும் பெற்றது.

மாநாட்டின் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் அனைத்து நாட்டு தலைவர்களும், உள்நாட்டு சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் கைக்குலுக்கி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு டிரெண்டிங்காகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link