News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற சிறப்புக்கூட்டத் தொடரை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

 

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் இருந்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய விளக்கங்கள் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

 

அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தீர்மானமும் இந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

 

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது தலைமை செயலகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மசோதா நிறைவேற்றம் குறித்த சிறப்புக்கூட்டம் இது என்பதால், பிற பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப சபாநாயகர் அப்பாவு அனுமதிப்பதாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link