News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளநிலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை (நவ.18) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

 

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையும் அதைத்தொடர்ந்து நவ.19ம் தேதி நடைபெற உள்ள திருக்கல்யாண நிகழ்ச்சியையும் காண பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பக்தர்களின் வசதிக்காக தென்னக ரெயில்வே 2 சிறப்பு ரெயில்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

 

அதன்படி இன்று (நவ.17) சென்னை& திருநெல்வேலிக்கு இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நாளை நண்பகல் 12.45 மணியளவில் திருநெல்வேலியை சென்றடைகிறது. அதேபோல் மறுமார்க்கமாக திருச்செந்தூர் முதல் தாம்பரம் வரையிலான ரெயில் நாளை (நவ.18) இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நவம்பர் 19ம் தேதி நண்பகல் 12.45 மணியளவில் தாம்பரத்தை வந்தடைகிறது என்று அறிவித்துள்ளது. தென்னக ரெயில்வேயின் 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link