News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சனை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த பேசியதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஆகஸ்டு 10ம் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பான் இந்தியா திரைப்படமான ஜெயிலருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு காரணம் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்.

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனை அழைத்து பேசியதாகவும், ஜெயிலர்2 படத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். ரஜினிகாந்தே நேரடியாக அழைத்து பேசியதால் மகிழ்ச்சியடைந்துள்ள நெல்சன், தீவிரமாக கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுசுடன் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது ஜெயிலர்2 படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ திரைப்படத்தில் முழு வீச்சாக நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link