News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக அரசால் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசுக்கும், அதன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.


இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை  நாடிய தமிழக அரசு, ஆளுநர் தமிழக அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது. கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்ததுடன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டிஸ் அனுப்ப அதிரடி உத்தரவு பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தமிழக அரசு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளனர். இது குறித்து கிடைத்துள்ள முதல்கட்ட தகவல்படி, மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link