Share via:
ஜி20 மாநாட்டை தொடர்ந்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தனது மனைவியுடன் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு வருகை புரிந்தார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரிஷிசுனக் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
அலுவல் ரீதியாக டெல்லி வந்தாலும், தன் சொந்த மண்ணில் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன், அக்ஷர்தாம் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்தார். அப்போது கோவிலை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ரிஷி சுனக் பேண்ட் சட்டை அணிந்தும், அவரது மனைவி சல்வார் அணிந்தும் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.அவர்களுக்கு கோவிலில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கை, சுவாமிகள் மற்றும் அக்ஷர்தாம் கோவிலின் மூத்த தலைவர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். கோவிலை சுற்றிப் பார்த்த அவர்களுக்கு பண்டைய கட்டிடக்கலையின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் கோவிலின் வளாகத்தில் சுவாமி சிலைகளுக்கு ரிஷிசுனக் தம்பதி மரியாதை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். மேலும் ரிஷி சுனக் குடைபிடித்தபடி தனது மனைவியுடன் நடந்து செல்லும் புகைப்படதற்கு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு, நாட்டிற்கே பிரதமர் என்றாலும், மனைவிக்கு கணவன்தானே என்று நெட்டீசன்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் பேசிய ரிஷி சுனக், டெல்லியில் உள்ள கோவில்களை காண விரும்புவதுடன், உணவகங்களுக்கு சென்று இந்திய உணவுகளை ருசி பார்க்க தான் விரும்புவதாகவும் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.