News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.


இந்திய பெருங்கடலில் நேற்று (நவ.15) நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவானது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கி.மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டது.


இந்நிலையில் பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தங்கள் குடும்பத்துடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சத்துடன் சாலைகளில் அவர்கள் காத்திருந்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link