News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு கிரிவலம் வருவார்கள்.


அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


முக்கிய நிகழ்வான மகாதேரோட்டம் வருகிற (நவ) 23ம் தேதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 26ம் தேதி பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளதாகவும், தீபத்திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் தீபத்திருவிழாவின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link