Share via:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பாசத்தின் பிணைப்பால் ஜவஹர்லால் நேருவை ‘நேரு மாமா’ என்று அன்புடன் அழைத்து வந்தனர்.
அதன்படி கடந்த 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த குழந்தைகள் தினம், ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கு பின்னர் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், ‘‘இன்றைய குழந்தைகள் நாளை இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்’’ என்று நேருவின் வரிகளை மேற்கோள்காட்டி குழந்தைகள் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.