Share via:
சென்னையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதல் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி சென்னை புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள 3 நபர்களுக்கும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சோதனை நடத்தப்பட்டு வரும் இடங்களில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில், வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை கருத்தில் கொண்டு என்.ஐ.ஏ.வின் சோதனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.